நாடாளுமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில் அனைத்து கட்சி தலைவர்களும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். தேர்தல் அதிகாரிகள் உள்ளிட்ட தேர்தல் பணிகளில் ஈடுபடுபவர்கள் தங்களுடைய பணிகளில் தீவிரம் காட்டி வருகிறார்கள். இந்த நிலையில் தேர்தல் பணிகளில் ஈடுபடும் அதிகாரிகள் தபால் வாக்கு செலுத்துவதற்கு ஒரு நாள் கூடுதல் அவகாசம் வழங்கப்பட்டது. தமிழ்நாட்டில் தபால் வாக்கு செலுத்துவதற்கு வழங்கப்பட்ட அவகாசம் ஏப்ரல் 16ஆம் தேதி இன்று மாலையுடன் முடிவடைவதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.