தமிழகத்தில் வருகின்ற 19-ம் தேதி ஒரே கட்டமாக நாடாளுமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சிகள் பலவும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். தமிழகத்தில் திமுக- காங்கிரஸ் கூட்டணி, பாஜக, அதிமுக மற்றும் நாம் தமிழர் கட்சி என நான்குமுனை போட்டிகள் நிலவி வருகிறது. இந்நிலையில் நேற்று சென்னை தலைமைச் செயலகத்தில் தலைமை தேர்தல் அதிகாரி சத்திய பிரதா சாஹூ செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, வாக்குப்பதிவு நாளில் தனியார் நிறுவனங்களுக்கு விடுமுறை வழங்கப்படவில்லை என்றால் எஸ்டிடி கோடை சேர்த்து 1950 என்ற தொலைபேசி நம்பருக்கு தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம்.

அதன் பிறகு விளவங்கோடு சட்டசபை தொகுதியில் இடைத்தேர்தல் மற்றும் நாடாளுமன்ற தேர்தல் வருகின்ற 19-ஆம் தேதி காலை 7:00 மணி முதல் மாலை 6:00 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. எனவே நாளை மாலை 6:00 மணியுடன் பிரச்சாரம் நிறைவடைகிறது. அதன் பிறகு அமைதி பிரச்சாரம் உட்பட எந்தவித பிரச்சாரத்திற்கும் அனுமதி கிடையாது. எனவே தொகுதிகளுக்கு தொடர்பில்லாத நபர்கள் ஏப்ரல் 17-ஆம் தேதி மாலை 6:00 மணிக்கு மேல் அந்த தொகுதியை விட்டு வெளியேற வேண்டும் என்று கூறியுள்ளார்.