செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் உள்ள தனியார் மண்டபம் ஒன்றில் பாட்டாளி மக்கள் கட்சி மற்றும் கொங்கு தமிழ் வளர்ச்சி அறக்கட்டளை சார்பாக தமிழை தேடி என்ற பயணத்தை பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கடந்த 21ஆம் தேதி தொடங்கி வைத்தார். அப்போது பேசிய அவர் தமிழகத்தில் இனி வரும் எந்த இடைத்தேர்தலிலும் பாமக போட்டியிடாது என அக்கட்சியின் மூத்த தலைவர் ஜி.கே.மணி அறிவித்துள்ளார்.

இதுபற்றி அவர், இதுவரை நாங்கள் ஒரே ஒரு இடைத்தேர்தலில் மட்டுமே போட்டியிட்டுள்ளோம். இடைத்தேர்தலில் ஒரு தொகுதி வெற்றியால் ஆட்சி மாற்றம் நிகழுமா? அப்படி இருக்கும்போது ஏன் போட்டியிட வேண்டும்? இதனை கருத்தில் கொண்டு, இனி தமிழகத்தில் நடக்கும் எந்த இடைதேர்தலிலும் பாமக போட்டியிடாது என்றார்.