தமிழகத்தில் அரசு பணிகளில் மற்ற மாநிலங்களை சேர்ந்தவர்கள் அதிகமானோர் பணியாற்றி வருவதாக அரசுக்கு தொடர்ந்த புகார்கள் எழுந்த வண்ணம் உள்ளன. மற்ற மாநிலத்தை சேர்ந்த அரசு அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் தமிழக மக்களிடம் சரளமாக அவர்களின் மொழியில் பேசி அரசு திட்டங்கள் மற்றும் செயல்பாடுகளை தெரிவிப்பதில் பல குறைபாடுகள் இருப்பதாக தெரிவித்த நிலையில் தமிழர்களின் வேலைவாய்ப்பில் மற்ற மாநிலத்தவர்கள் அதிகம் இடம் பிடிப்பது வருத்தம் அளிப்பதாகவும் விவாதம் எழுந்ததால் தமிழக அரசு பணிகளில் தமிழ் மொழியில் தேர்ச்சி பெற்றவர்கள் தான் பணிவாய் பெற முடியும் என டிஎன்பிஎஸ்சி தேர்வுகளில் தமிழ் மொழியை அரசு கட்டாயமாக்கி கடந்த 2021 ஆம் ஆண்டு அறிவித்தது.

இந்நிலையில் சட்டமன்ற கூட்டத் தொடரில் இந்த சட்டத்தில் புதிய திருத்தம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி தமிழில் தேவையான அளவு புலமை பெறாதவர்கள் அரசு பணியில் இருந்தாலும் பணியில் சேர்ந்த இரண்டு வருடங்களுக்குள் அவர்கள் தமிழ் மொழி தேர்வில் கட்டாயம் தேர்ச்சி பெற வேண்டும் என திருத்தம் செய்யப்பட்டுள்ளது.எனவே தமிழ் மொழியில் தேர்ச்சி பெறவிட்டால் இனி அரசு பணி கிடையாது என அரசு தெளிவாக விளக்கியுள்ளது.