நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பெரியார் குறித்து பேசியது சர்ச்சையாக மாறிய நிலையில் அவர் மீது காவல் நிலையங்களில் வழக்குகள் என்பது குவிந்து வரும் நிலையில் புதுச்சேரிக்கு சென்று அவருடைய காரின் கண்ணாடியை பெரியார் உடைத்தனர். காலை நேரத்தில் சீமான் வீட்டை முற்றுகையிட சென்றதால் பரபரப்பு ஏற்பட்ட நிலையில் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில் புதுச்சேரிக்கு கட்சி நிகழ்ச்சிக்காக சென்ற சீமானிடம் செய்தியாளர்கள் பெரியார் குறித்து பேசியது சர்ச்சையாக மாறியது தொடர்பாக கேள்வி எழுப்பினர். அதற்கு சீமான் கூறியதாவது, பெரியார் அப்படி பேசியதற்கான ஆதாரங்களை அவர்களே (திமுக) வைத்துள்ளனர். அப்படி இருக்கும்போது என்னிடம் கேட்பது எந்த விதத்தில் நியாயம்.?
இது தொடர்பாக க.ப அரவாணன் உள்ளிட்ட பல எழுத்தாளர்கள் புத்தகங்களில் எழுதியுள்ளனர். அனைத்து ஆதாரங்களையும் முடக்கி வைத்துக் கொண்டு என்னிடம் வந்து கேட்கிறார்கள். இஸ்லாமியர்கள் மற்றும் கிறிஸ்தவர்கள் எதிரி என்று கூறும் நிலையில் தமிழ்நாட்டில் தமிழர்கள் என்று பேசுவது எந்த இனத்திற்கு எதிரி. நம்மை கீழானவர்கள் என்று அவர்கள் கூறுகிறார்கள். பெண்ணியத்தைப் பற்றி பெரியார் பேசியதை தான் நான் எதிர்க்கிறேன். நானும் கடந்த 2008 ஆம் ஆண்டு வரை திருட்டு கூட்டத்தில் ஒருவனாகத்தான் இருந்தேன். ஆனால் பிரபாகரனை சந்தித்த பிறகு தான் மாறினேன்.
என்னுடைய கொள்கைகள் என்பது திராவிடத்திற்கு ஆதரவாக பேசுபவர்களுக்கு எதிராகத்தான் இருக்கிறது. பெரியார் தொடர்பாக கருத்து தெரிவித்த எனக்கு எதிராக குரல் கொடுத்தவர்கள் எதற்காக டங்ஸ்டன் மற்றும் அண்ணா பல்கலைக்கழக விவகாரத்திற்கு எதிராக குரல் கொடுக்கவில்லை. எனக்கு எதிராக போராட்டம் நோக்கி செருப்பு எரிபவர்களுக்கு நான் சொல்வது ஒன்றே ஒன்றுதான். செருப்பு சைஸ் ஏழு அல்லது எட்டு ஆக இருக்க வேண்டும். இதைப்போன்று நாட்டுக்கோழி முட்டையாக வீசுங்கள் என்பதும். திராவிடத்தை பற்றி தொடர்ந்து பேசும் வரை நானும் பெரியார் பற்றி பேச தான் செய்வேன். மேலும் பெரியார் குறித்து பேசியதற்கு என் மீது வழக்கு போட்டால் அதை எதிர்கொள்ள நான் தயாராக இருக்கிறேன் என்று கூறினார்.