அமெரிக்காவைச் சேர்ந்த ஒரு விமானத்தில் பயணித்த 26 வயதான எரிக் நிக்கோலஸ் கேப்கோ என்ற நபர், விமானம் பறந்து கொண்டிருந்தபோது திடீரென விமானத்தின் கதவுகளைத் திறக்க முயற்சித்து உள்ளார், அதை தடுத்த விமானப் பணிப்பெண்ணுடன் தவறாக நடக்க முயற்சித்துள்ளார். இதனால் ஏற்பட்ட கலவரத்தில் அவரை விமானப் பணியாளர்கள் மற்றும் பயணிகள் சிறைப்பிடித்துள்ளனர்.

மேலும் கேப்கோ தனது சட்டையை கழற்றிவிட்ட படி அநாகரிக செயலுடன் விமானப் பணிப்பெண்ணிடம் பாலியல் உறவுக்கு வருமாறு கேட்டுள்ளார். கோபமடைந்த அவர் கத்திக்கொண்டே இருந்ததாகவும், பின்னர் கழிப்பறையில் சென்று அவர் பூட்டிக்கொண்டதாகவும் கூறப்படுகிறது. விமானப் பணியாளர்கள் மற்றும் பயணிகள் இணைந்து அவரை கட்டுப்படுத்தியுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டு, கேப்கோ கைது செய்யப்பட்டார். அவர் மீது விமானப் பணியாளர்களின் பணியைத் தடுத்தல் மற்றும் விமானத்தை சேதப்படுத்த முயற்சித்தல் உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் கூறப்பட்டுள்ளன. மேலும், காவல் நிலையத்தின் கண்ணாடி கதவை உடைத்தது மற்றும் போலீஸை தாக்கியதற்காகவும் அவர் மீது குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டார்.