தமிழகத்தில் சுதந்திர தின விழாவை முன்னிட்டு இன்று அரசு பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை வருவதால் பலரும் தங்கள் சொந்த ஊர் செல்ல திட்டமிட்டுள்ளனர். இந்த நிலையில் தமிழகத்தில் உள்ள தனியார் பள்ளிகள் பலவற்றுக்கு ஆகஸ்ட் 15 இன்று முதல் தொடர்ச்சியாக நான்கு நாட்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி ஆகஸ்ட் 15 சுதந்திர தினம், ஆகஸ்ட் 16 வரலட்சுமி விரதம், ஆகஸ்ட் 17 மற்றும் 18 ஆகிய தேதிகளில் வார விடுமுறை வருவதால் பல்வேறு தனியார் பள்ளிகள் இன்று முதல் ஞாயிற்றுக்கிழமை வரை தொடர் விடுமுறை அறிவித்துள்ளன. இந்த அறிவிப்பு பள்ளி மாணவர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.