தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் தமன்னா. இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி, மராத்தி போன்ற மொழிகளில் பல முன்னணி ஹீரோகளுக்கு ஜோடியாக நடித்துள்ளார்‌. இவர் மலையாளத் திரையுலகிலும் ஒரு புதிய படத்தின் மூலம் அறிமுகமாக இருக்கிறார். இவருடைய நடிப்பில் சமீபத்தில் பப்ளி பவுன்சர் என்ற திரைப்படம் ரிலீஸ் ஆனது.

இந்நிலையில் நடிகை தமன்னா காதலில் விழுந்துள்ளதாக கிசுகிசுக்கப்படுகிறது. இந்தி வெப் சீரிஸ்களில் வில்லன் கதாபாத்திரங்களில் நடிக்கும் விஜய் வர்மா தான் அவரது புதிய காதலர் என்று கூறப்படுகிறது. பொது நிகழ்ச்சிகளில் இருவரும் ஒன்றாக வலம் வருகின்றனர். சமீபத்தில் நடந்த நியூ இயர் பார்ட்டியில் இருவரும் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் வைரலாகின. தமன்னா தரப்பில் இருந்து இதுகுறித்து எந்த விளக்கமும் அளிக்கப்படவில்லை