ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் மற்றும் சுரேஷ் புரோடக்‌ஷன் தயாரிப்பில் தெலுங்கில் ஜதி ரத்னாலு என்ற நகைச்சுவை வெற்றி திரைப்படத்தைக் கொடுத்த டிரைக்டர் அனுதீப் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் தீபாவளி வெளியீடாக திரைக்கு வந்த படம் பிரின்ஸ். இந்த படத்தில் உக்ரைன் நாட்டைச் சேர்ந்த மரியா சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்து இருந்தார். தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளியான இந்த படம் கடுமையான விமர்சனங்களைப் பெற்றதுடன் தோல்வி திரைப்படமாகவும் அமைந்தது.

இந்நிலையில் பிரின்ஸ் திரைப்படம் எதிர்பார்த்த அளவில் வெற்றி அடையாததால் நடிகர் சிவகார்த்திகேயன், விநியோகஸ்தர்களுக்கு இழப்பீடு வழங்கியதாக தகவல் வெளியாகியுள்ளது. சிவகார்த்திகேயன் மற்றும் பிரின்ஸ் பட தயாரிப்பு நிறுவனம் இணைந்து நஷ்டத்தில் பாதி தொகையான 6 கோடியை திருப்பி அளித்துள்ளனர். அதே தயாரிப்பு நிறுவனத்தில் தனது அடுத்த படமான மாவீரனில் சிவகார்த்திகேயன் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.