சிறுத்தை, வீரம், விஸ்வாசம், அண்ணாத்த உட்பட பல்வேறு திரைப்படங்களை டைரக்டு செய்த சிவா இயக்கும் படத்தில் சூர்யா இப்போது நடித்து வருகிறார். சூர்யா 42 என தற்காலிகமாக பெயரிடப்பட்டிருக்கும் இந்த படத்தை ஸ்டுடியோ கிரீன் மற்றும் யுவி கிரியேஷன் நிறுவனம் இணைந்து தயாரிக்கின்றனர். இந்த படத்தில் பாலிவுட் நடிகை திஷா பத்தானி, யோகிபாபு, கிங்ஸ்லி, கோவை சரளா, ஆனந்த் ராஜ் உட்பட பலர் முக்கியமான கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

தேவிஸ்ரீ பிரசாத் இசை அமைக்கவுள்ள இந்த படம் 3டி முறையில் சரித்திர திரைப்படமாக 10 மொழிகளில் வெளியாக உள்ளது. இந்த நிலையில் சூர்யா 42 படத்தின் புது தகவல் வெளியாகியுள்ளது. அந்த வகையில் இந்த படத்தின் இந்தி பதிப்பின் திரையரங்க உரிமை, சாட்டிலைட் உரிமை மற்றும் டிஜிட்டல் உரிமை போன்றவை ரூபாய்.100 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டு இருப்பதாகவும் பென் ஸ்டூடியோஸ் என்ற நிறுவனம் இதை வாங்கியுள்ளதாகவும் சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கிறது.