சென்னையில் உள்ள கலாஷேத்ரா கல்லூரி மாணவிகள் சிலர் அங்கு பணிபுரியும் பேராசிரியர்கள் மீது பாலியல் புகார் தெரிவித்த சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. தலைமறைவாக இருந்த ஹரி பத்மனை போலீசார் தனிப்படை அமைத்து தேடி வந்த நிலையில் ஹைதரபாத்தில் அவர் இன்று காலை கைது செய்யப்பட்டார்.

இந்நிலையில், பாலியல் புகாரில் குற்றம் சாட்டப்பட்ட பேராசிரியர்கள் ஹரிபத்மன், சஞ்சித் லால், ஸ்ரீநாத், சாய் கிருஷ்ணா ஆகியோரை சஸ்பெண்ட் செய்துள்ளதாக கல்லூரி நிர்வாகம் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து, பாலியல் புகாரில் தேடப்பட்டு வந்த உதவி பேராசிரியர் ஹரிபத்மனுக்கு ஏப்.13 வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி சுப்பிரமணியம் உத்தரவிட்டுள்ளார்.