அண்ணா பல்கலைக் கழகத்துக்கு கீழ் இயங்கும் பொறியியல் கல்லூரிகளுக்கான செமஸ்டர் தேர்வு தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி மே-26ஆம் தேதி தமிழ்நாடு முழுவதும் தேர்வுகள் தொடங்க இருக்கின்றன. அதற்கு முன்னதாக மே 15ஆம் தேதி செய்முறை தேர்வுகள் தொடங்க இருக்கிறது. அடுத்த கல்வியாண்டுக்கான வகுப்புகள் ஆகஸ்ட் 7ஆம் தேதி தொடங்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.