மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள தொட்டியபட்டி பகுதியை சேர்ந்தவர் செந்தில்குமார். இவர் கல்லூரி ஒன்றில் பேராசிரியராக பணியாற்றி வரும் நிலையில் இவருக்கு மதுப்பழக்கம் மற்றும் திருமணத்தை மீறிய உறவு இருந்ததாக கூறப்படுகின்றது. இதனால் மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் செந்தில்குமார் தற்கொலை செய்து கொண்டார்.

இந்த அதிர்ச்சியில் செந்தில்குமாரின் மனைவி வீரலட்சுமி தன்னுடைய இரண்டு மகள்களையும் கொன்று விட்டு தானும் தற்கொலை செய்து கொண்டார். ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.