தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர் நடிகை சமந்தா. தற்போது யசோதா திரைப்படத்தில் இவர் நடித்துவரும் நிலையில் மயோசிடிஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக ட்விட்டரில் பதிவிட்டார்.  தற்போது அதிலிருந்து மீண்டு வருவதாகவும் தெரிவித்திருந்தார். அதேபோல உயிருக்கு போராடும் நிலையில் நான் உள்ளதாக செய்திகள் பரவிவருகிறது. இப்போது வரை நான் சாகாமல் தான் இருக்கிறேன் என்று நடிகை சமந்தா கண்ணீருடன் வேதனை தெரிவித்தார். மேலும், இதுபோன்ற செய்திகளை தவிர்க்க வேண்டும். என்று வேண்டுகோள் விடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில்  தற்போது மும்பை ஏர்போட்டிலிருந்து எடுக்கப்பட்ட சமந்தாவின் வீடியோ ஒன்று வைரலாகி வருகின்றது. அதில் பார்ப்பதற்கே மிகவும் மெலிந்துபோய், முகத்தில் சந்தோஷமின்றி காணப்படுகிறார். இதைப்பார்த்த ரசிகர்கள் சமந்தாவுக்கு என்னாச்சு என கேள்வி எழுப்பி வருகின்றனர்.