விஜய்-சங்கீதா விவாகரத்து குறித்து பரவிய வதந்திக்கு முற்றுப்புள்ளி கிடைத்துள்ளது.

தமிழ் சினிமா உலகில் உச்ச நட்சத்திரமாக வலம் வருகின்றார் விஜய். இவர் சங்கீதா என்பவரை திருமணம் செய்து கொண்ட நிலையில் இவர்களுக்கு ஒரு மகனும் ஒரு மகளும் உள்ளனர். இந்த நிலையில் விஜய் தனது மனைவி சங்கீதாவை விவாகரத்து செய்து விட்டார் எனவும் அதனால் சங்கீதா லண்டனுக்கு சென்று விட்டதாகவும் தகவல் வெளியானது.

அதனால் தான் வாரிசு இசை வெளியீட்டு விழாவிற்கு வரவில்லை எனவும் இயக்குனர் அட்லீ மனைவியின் வளைகாப்பு நிகழ்ச்சிக்கு வரவில்லை எனவும் பேசப்பட்டது. இந்த நிலையில் இது குறித்து உண்மை நிலவரம் தெரிய வந்திருக்கின்றது. விஜய்-சங்கீதா விவாகரத்து செய்து விட்டார்கள் என்ற தகவல் உண்மை கிடையாது. இந்த பேச்சு எப்படி கிளம்பியது என்று தெரியவில்லை. அவர்களுக்கு இடையே எந்தவித பிரச்சனையும் இல்லை எனவும் விஜய் மற்றும் சங்கீதாவிற்கு நெருக்கமானவர்கள் தெரிவித்துள்ளார்கள்.

இந்த நிலையில் விவாகரத்து குறித்து பரவிய வதந்திக்கு முற்றுப்புள்ளி கிடைத்துள்ளது. சங்கீதா தனது பிள்ளைகளின் வெக்கேஷனுக்காக லண்டனில் இருக்கும் அம்மா வீட்டிற்கு சென்றிருக்கின்றாராம். விரைவில் விஜயும் லண்டனுக்கு செல்ல இருக்கின்றாராம். அங்கு சில நாட்கள் தங்கிவிட்டு பின்னர் தனது மனைவி மற்றும் பிள்ளைகளை அழைத்துக் கொண்டு விஜய் சென்னை திரும்புவாரம். இதன் காரணமாகவே இசை வெளியீட்டு விழா மற்றும் அட்லீ வீட்டு விசேஷத்தில் சங்கீதாவால் பங்கேற்க முடியவில்லை. இதை தவிர்த்து வேறு எந்த காரணமும் இல்லை என தகவல் வெளியாகி உள்ளது.