மத்தியபிரதேசம் மாநிலம் கேஜ்ரகாலா கிராமத்தில் சஞ்சோடா-பீனாகஞ்ச் பகுதியில் வசித்து வந்தவர் நிரஞ்சன் சிங் மீனா. இவர் திடீரென்று உயிரிழந்த நிலையில், இறுதிசடங்கு கிராமத்தில் நடந்துள்ளது. இதற்காக அவரது உறவினர்கள், நண்பர்கள் என 200க்கும் அதிகமானோர் வந்திருந்தனர். இதையடுத்து இறுதி சடங்கிற்காக அவர்கள் அனைவரும் புறப்பட்டு சென்றுள்ளனர்.

அப்போது அவர்களை நோக்கி மரங்களிலிருந்த தேனீக்கள் கூடியிருந்த கிராமவாசிகளை சூழ்ந்து கொண்டு தாக்கியது. இதனால் வலி பொறுக்க முடியாமல் பலர் தப்பியோடி இருக்கின்றனர். இச்சம்பவத்தில் பலருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. இவர்களில் தகத் சிங் மீனா ஜெய்சிங் புரா என்பவர் படுகாயமடைந்து உயிரிழந்துள்ளார். அதேபோல காயமடைந்த 4 பேர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர்.