மாநிலங்களுக்கான ஜூன் மாத ஜிஎஸ்டி நிலுவைத் தொகை ரூ.16,982 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். இதில் தமிழ்நாட்டுக்கு ரூ.1201 கோடி விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். ஜிஎஸ்டி நிதியில் இருந்து இல்லாமல், மத்திய அரசு நிதி ஆதாரங்களில் இருந்து நிலுவைத் தொகை விடுவிக்கப்பட்டதாக கூறியுள்ளார்.

இதனைத்தொடர்ந்து பென்சில் மற்றும் ஷார்ப்னர் மீதான ஜிஎஸ்டி, 18 சதவீதத்தில் இருந்து 12 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது என அறிவித்தார். இதனால் பென்சில் மற்றும் ஷார்ப்னரின் விலை குறையவுள்ளது. அதோடு ஜிஎஸ்டி நிலுவைத் தொகை மொத்தமும் உடனடியாக மாநிலங்களுக்கு பிரித்து அளிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.