பரபரப்பான வாழ்க்கை சூழலில் மக்களிடையே மாரடைப்பு அதிகரித்துள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அதிலும் குறிப்பாக இளைஞர்கள் மத்தியில் மாரடைப்பு என்பது சமீப காலமாகவே அதிகரித்துவிட்டது. இந்த நிலையில் லக்சம்பர்க் பல்கலைக்கழக மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் மாரடைப்பை முன்கூட்டியே கணிக்கும் கருவியை உருவாக்கியுள்ளனர். AI தொழில்நுட்பத்தில் இயங்கும் இந்த கருவி இதயத்துடிப்பில் ஏற்படும் மாற்றத்தை 80 சதவீதம் முன்கூட்டியே கணிக்கின்றது. சீனாவில் நோயாளிகள் 350 பேரிடம் இந்த கருவி சோதிக்கப்பட்டுள்ளது.