பிரபல இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் கடந்த 2014-ம் ஆண்டு வெளியான ஜிகர்தண்டா திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தில் சித்தார்த், லட்சுமிமேனன், பாபி சிம்ஹா உள்ளிட்டோர் முக்கிய வேடத்தில் நடித்திருந்தனர். இந்த படத்தில் நடித்ததற்காக நடிகர் பாபி சிம்ஹாவுக்கு தேசிய விருது கிடைத்தது. இந்த படம் வெளியாகி கிட்டத்தட்ட 8 வருடங்கள் கடந்துவிட்ட நிலையில் கார்த்திக் சுப்புராஜ் தற்போது ஜிகர்தண்டா 2 திரைப்படத்தை இயக்கி வருகிறார்.

இந்த படத்தில் எஸ்.ஜே சூர்யா மற்றும் ராகவா லாரன்ஸ் லீடிங் ரோலில் நடிக்கிறார்கள். இந்த படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் கவனத்தை பெற்ற நிலையில், தற்போது எஸ்.ஜே சூர்யா ஜிகர்தண்டா 2 குறித்து ஒரு டுவிட்டர் பதிவை வெளியிட்டுள்ளார். அதில் 36 நாட்கள் ஒரே ஷெட்யூலில் ஜிகர்தண்டா 2. இந்த வாய்ப்புக்காக கார்த்திக் சுப்புராஜுக்கு நன்றி சார். ராகவா லாரன்ஸ் அருகில் நான் பார்த்த அற்புதமான உள்ளம் என்று பதிவிட்டுள்ளார். மேலும் இந்த பதிவு தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரல் ஆகி வருகிறது.