டைரக்டர் வம்சி இயக்கத்தில் விஜய் நடித்த வாரிசு படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியானது. இப்படத்தில் ராஷ்மிகா மந்தனா, சரத்குமார், பிரகாஷ்ராஜ், ஜெயசுதா, குஷ்பூ, ஸ்ரீகாந்த், ஷாம், யோகிபாபு, சங்கீதா, சம்யுக்தா, கணேஷ் வெங்கட்ராமன் என பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்து உள்ளனர். இந்த படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார்.

இந்நிலையில் வாரிசு படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் சென்னை பிரசாத் லேப்-ல் பத்திரிக்கையாளர் சந்திப்பு நடந்தது. இதில் இயக்குனர் வம்சி, தயாரிப்பாளர் தில்ராஜு, நடிகர்கள் சரத்குமார், ஷாம், விடிவி கணேஷ், சங்கீதா, பாடலாசிரியர் விவேக், படத்தொகுப்பாளர் பிரவீன் கே.எல், இசையமைப்பாளர் தமன் போன்றோர் பங்கேற்றனர்.

அப்போது தயாரிப்பாளர் தில்ராஜு பேசியதாவது “தெலுங்கில் முன்னணி நடிகர்களுடன் பேமிலி சப்ஜெக்ட் படங்கள் செய்திருக்கிறேன். ஏன் விஜய் சாருடன் அப்படி ஒரு படத்தை பண்ண கூடாது என ஆரம்பித்தது தான் வாரிசு. இந்தத் திரைப்படம் பணம் மட்டுமின்றி பலரது பாராட்டுகளையும் பெற்று வருகிறது” என்று அவர் பேசினார்.