பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தளபதி விஜய்யின் வாரிசு படமும், தல அஜித்குமாரின் துணிவு திரைப்படமும் ரிலீஸ் ஆகி ரசிகர்கள் மத்தியில் வசூல் மற்றும் விமர்சன ரீதியாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி தமிழகத்தில் வசூல் சாதனையில் அஜித்தின் துணிவு திரைப்படம் முதல் இடத்திலும், வாரிசு படம் 2வது இடத்திலும் இருப்பதாக பாக்ஸ் ஆபிஸ் நிலவரம் தெரிவிக்கிறது. அதேநேரம் வாரிசு படம் தமிழ், தெலுங்கை காட்டிலும் இந்தியில் பெரும் வரவேற்பு பெற்று வருகிறது.
அதன்படி கடந்த 5 நாட்களில் வாரிசு திரைப்படம் உலக அளவில் அனைத்து மொழிகளிலும் பெற்ற வசூலின் வாயிலாக ரூபாய்.150 கோடியை தாண்டி இருக்கிறது. இதை தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. மற்றொருபுறம் துணிவு படம் இந்தியில் இன்னும் வெளியாகவில்லை. இதனால் துணிவு உலகளவில் ரூ.100 கோடியை தாண்டி உள்ளதாக கூறப்படுகிறது. தமிழகத்தில் துணிவு திரைப்படம் முன்னிலையில் இருந்தாலும், உலக அளவில் வாரிசு திரைப்படமே அதிக வசூலை குவித்திருக்கிறது.