திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள காக்களூர் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியில் ஹரிஹரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சியாமளா என்ற மனைவி உள்ளார். நேற்று முன்தினம் அதிகாலை சியாமளா தனது வீட்டு வாசலில் கோலம் போட்டு கொண்டிருந்தார். அப்போது திடீரென வந்த மர்ம நபர் சியாமளாவின் முகத்தில் மிளகாய் பொடியை தூவி அவரது கழுத்தில் அணிந்திருந்த தங்க சங்கிலி மற்றும் கையில் அணிந்திருந்த வளையல் என 7 1/2 பவுன் தங்க நகையை பறித்து கொண்டு அங்கிருந்து தப்பி சென்றார். இதுகுறித்து சியாமளா அளித்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் நகையை பறித்த ராஜன் என்பவரை கைது செய்து தங்க நகைகளை பறிமுதல் செய்துள்ளனர்.
கோலம் போட்டு கொண்டிருந்த பெண்…. மிளகாய் பொடி தூவி நகையை பறித்த மர்ம நபர்…. போலீஸ் விசாரணை…!!
Related Posts
“மாமியாரும், கொழுந்தியாளும் டார்ச்சர் பண்றாங்க”… மனைவியும் சண்டை போடுறா… வீடியோ வெளியிட்டு கணவன் தற்கொலை… சென்னையில் பரபரப்பு..!!
சென்னையில் உள்ள கேகே நகர் காமராஜர் சாலை பகுதியில் அஜித் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு திருமணம் ஆகி ஒரு மகள் இருக்கிறார். இவருக்கும் அவருடைய மனைவிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் மனம் உடைந்த அவர் சம்பவ…
Read more“ஓரமா போய் ஆடுங்கன்னு சொன்னது ஒரு குத்தமா”..? கோவில் திருவிழாவில் நடனமாடிய வாலிபர் குத்தி கொலை… 2 பேர் படுகாயம்… கரூரில் பரபரப்பு..!!
கரூர் மாவட்டத்திலுள்ள குளித்தலை பகுதியில் மாரியம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் நேற்று பூச்சொரிதல் விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சிலர் நடனமாடிக் கொண்டிருந்தனர். அதன்படி சுந்தர் என்ற 21 வயது வாலிபர் நடனமாடி கொண்டிருந்த போது அவர் மீது நாகேந்திரன்…
Read more