திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ரெங்கசமுத்திரப்பட்டி பகுதியில் கார்த்திகேயன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கும் அதே பகுதியில் வசிக்கும் சரண்யா என்பவருக்கும் முன் விரோதம் இருந்துள்ளது. இந்நிலையில் இருவருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்ட போது கார்த்திகேயன் சரண்யாவை கொலை செய்து விடுவேன் என மிரட்டியுள்ளார். இதுகுறித்து சரண்யா திண்டுக்கல் தாலுகா காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் கார்த்திகேயனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.