கடலூர் மாவட்டத்தில் உள்ள விருதாச்சலம் செல்வராஜ் நகரில் விக்னேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த 10 மாதத்திற்கு முன்பு வேறு மதத்தைச் சேர்ந்த கெசியால் (21) என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். கடந்த சில நாட்களாக கணவன் மனைவிக்கு இடையே குடும்ப பிரச்சினை காரணமாக தகராறு ஏற்பட்டது.

சம்பவம் நடைபெற்ற அன்று மீண்டும் தகராறு ஏற்பட்டதால் மன உளைச்சலில் கெசியால் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து அறிந்த போலீசார் அங்கு சென்று கெசியாலின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.