விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள திடீர் குப்பம் பகுதியில் பாலா என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் பாலா தனது நண்பரான சூர்யா என்பவருடம் மோட்டார் சைக்கிளில் அயன்கோவில் பட்டு பகுதியில் இருக்கும் கோவிலுக்கு சென்றனர். பின்னர் அவர்கள் வீட்டிற்கு வந்து கொண்டிருந்தனர்.

இந்நிலையில் பேருந்து நிறுத்தம் அருகே சென்றபோது செஞ்சி நோக்கி வந்த கார் மோட்டார் சைக்கிள் மீது பலமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த 2 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இதுகுறித்து அறிந்த போலீசார் அங்கு சென்று இரண்டு பேரின் உடல்களையும் மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.