வேலூர் மாவட்டத்திலுள்ள அணைக்கட்டு, ஒடுகத்தூர், பள்ளிகொண்டா பகுதிகளிலும், திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள வாணியம்பாடி, ஆம்பூர் பகுதிகளில் நேற்று முன்தினம் காலை 7.39 மணிக்கு லேசான நில அதிர்வு உணரப்பட்டது. இதனால் அச்சமடைந்த பொதுமக்கள் வீடுகளை விட்டு அவசர அவசரமாக வெளியே ஓடிவந்தனர். ஆனால் அதிர்வால் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை.

இதுகுறித்து வேலூர் மாவட்ட ஆட்சியர் பெ.குமாரவேல் பாண்டியன் கூறியதாவது, அணைக்கட்டு, ஒடுகத்தூர், பள்ளி கொண்டா சுற்றுவட்டார பகுதிகளிலும் ஆம்பூர் வாணியம்பாடிலும் லேசான நில அதிர்வு உணரப்பட்டுள்ளது. அதேபோல் செங்கல்பட்டு கர்நாடக மாநிலத்தில் சில இடங்களில் உணரப்பட்டது. ஆனால் நில அதிர்வால் மக்களுக்கு பாதிப்பு ஏற்படவில்லை. மக்கள் பயப்பட வேண்டாம். இந்த நிலாதிவு ரிட்டர் அளவுகோலில் 3.1 ஆக பதிவாகியுள்ளது என கூறியுள்ளார். இந்த சம்பவம் பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.