காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள குன்றத்தூர் ஒன்றியம் வட்டாட்சியர் அலுவலகத்தில் இருக்கும் கூட்டுறவுத் துறையின் சார்பாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு 5 நடமாடும் வாகனங்கள் மூலமாக மலிவு விலையில் காய்கறிகள் பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறது. இதனை மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன் தொடங்கி வைத்தார்.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் கூறியதாவது, கூட்டுறவு துறையின் சார்பாக புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு மலிவு விலையில் காய்கறிகள் மளிகை பொருட்கள் வழங்கப்படுகிறது. மேலும் கூட்டுறவு மருந்தகங்கள் மூலமாக பொதுமக்களுக்கு தேவையான மருந்து பொருட்கள் வீடு வீடாக சென்று விற்பனை செய்யப்பட உள்ளது என கூறியுள்ளார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் வெங்கடேஷ், கூட்டுறவு துறை மண்டல இணைப்பதிவாளர் ஜெயஸ்ரீ உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.