கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள கட்டனூர் கிராமத்தில் தமிழரசன் என்பவர் வசித்து வந்துள்ளார். கடந்த சில மாதங்களாக வயிற்று வலியால் அவதிப்பட்ட தமிழரசன் பல்வேறு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். ஆனாலும் இவரது வயிற்று வலி குறையவில்லை.

சம்பவம் நடைபெற்ற அன்று மீண்டும் வயிற்று வலி ஏற்பட்டதால் மன உளைச்சலில் இருந்த தமிழரசன் தனது வீட்டில் விஷம் குடித்து மயங்கி கிடந்தார். அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு தர்மபுரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி தமிழரசன் பரிதாபமாக இறந்துவிட்டார். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.