திருப்பத்தூர் மாவட்டத்திலுள்ள ஆம்பூர் பெத்தலகேம் பகுதியில் டிரைவரான ஸ்ரீராம் என்பவர் ரசித்து வந்துள்ளார். இவர் தனது மோட்டார் சைக்கிளில் வேலூர் நோக்கி சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் ஸ்ரீராம் எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிளில் இருந்து நிலைதடுமாறி கீழே விழுந்து படுகாயம் அடைந்தார்.

அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர் ஸ்ரீ ராம் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளார். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.