கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள காவேரிப்பட்டணம் சண்முக சக்தி கோவில் தனியார் கலை அறிவியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இவர் தனது நண்பர்களுடன் விவசாய கிணற்றில் நீச்சல் பயிற்சிக்கு சென்றார். அப்போது எதிர்பாராதவிதமாக பிரித்விராஜ் தண்ணீரில் மூழ்கியதை பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்க முயற்சி செய்தனர். ஆனால் பிரித்விராஜை காப்பாற்ற இயலவில்லை.

இதுகுறித்து அறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு சென்று இரண்டு மணி நேர போராட்டத்திற்கு பிறகு பிரிதிவிராஜின் உடலை மீட்டனர். பின்னர் அவரது உடல் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.