தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பங்காரு குழிகாடு பகுதியில் குப்புசாமி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் விவசாயம் பார்த்து வந்துள்ளார். சம்பவம் நடைபெற்ற அன்று குப்புசாமி தனது மோட்டார் சைக்கிளில் சின்னம்பள்ளி பகுதிக்கு சென்று விட்டு மீண்டும் வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார்.

இந்நிலையில் பெரும்பாலை பெட்ரோல் விற்பனை நிலையம் பகுதியில் சென்ற போது பின்னால் வந்த மற்றொரு இரு சக்கர வாகனம் குப்புசாமியின் இருசக்கர வாகனம் மீது மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த குப்புசாமியை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி குப்புசாமி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.