சென்னை மாவட்டத்தில் உள்ள திருவொற்றியூரில் இருக்கும் மளிகை கடையில் மதன்ராஜ் என்பவர் வேலை பார்த்து வருகிறார். அதே பகுதியில் வசிக்கும் 16 வயது சிறுமி மளிகை கடைக்கு வந்து சென்ற போது மதன் ராஜுடன் பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியது. இதனை அறிந்த சிறுமியின் தந்தை காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தார். கடந்த 14-ஆம் தேதி மதன்ராஜ் சிறுமியை சொந்த ஊரான நாகர்கோவிலுக்கு கடத்தி சென்று பெற்றோர் சம்பந்தத்துடன் திருமணம் செய்தார். இதற்கிடையே சிறுமியின் தந்தை திருவொற்றியூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்த போலீசார் மதன்ராஜை கைது செய்தனர். மேலும் சிறுமியை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.
கடைக்கு சென்ற போது மலர்ந்த காதல்…. வாலிபர் போக்சோவில் கைது…. போலீஸ் விசாரணை…!!
Related Posts
“வருடத்தின் ஒரு நாள் மட்டுமே அற்புத தரிசனம்!”.. பதினெட்டாம் படி கருப்பண்ணசுவாமி கோவில் நடை திறப்பு..அலைமோதும் பக்தர்கள் கூட்டம்..!!!!
மதுரை மாவட்டத்தின் புகழ்பெற்ற ஆன்மிகத் தலமான அழகர்கோவிலில் அமைந்துள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க பதினெட்டாம் படி கருப்பண்ணசுவாமி கோயிலின் திருக்கதவுகள் திறக்கப்பட்டுள்ளன. ஆண்டுதோறும் வரும் ஆடிப் பெளர்ணமி திருநாளை முன்னிட்டு இந்தச் சிறப்பு நிகழ்வு வெகு விமரிசையாகக் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. வழக்கமாக வருடத்திற்கு…
Read more“மாணவனை ரத்தம் வர வர அடி வெளுத்த HM” சாதியைச் சொல்லி திட்டியதாக எழுந்த பகீர் புகார்…. திருநெல்வேலியில் வெடித்த மாபெரும் சர்ச்சை….!!
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளி ஒன்றில், மாணவர் ஒருவர் கடுமையான ரத்தக்காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. பள்ளியில் மாணவர்கள் இடையே ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து இந்த விபரீத சம்பவம் அரங்கேறியுள்ளது.…
Read more