
செய்தியாளரிடம் பேசிய ஓபிஎஸ் ஆதரவாளர் மருது அழகுராஜ், அம்மா காட்டிவிட்டு போன அடையாளத்தை கொண்டு ஒண்ட வந்த பிடாரி ஊர் பிடாரி விரட்டின மாதிரி, திண்ணையிலே ஒதுங்கி வந்த ஒரு ஆள்… அண்ணா நான் முதலமைச்சராவதற்கு வாய்ப்பு கொடுங்கள் என்று காலில் விழுந்த எடப்பாடிக்கு…. ஒரு சந்தர்ப்பம் கொடுத்தார்கள்….
நான்கரை வருடத்திலேயே அறுவடை செய்து கொண்டு….. கொள்ளையடித்த பணத்தை வைத்துக்கொண்டு….. கட்சியை கொள்ளையடிக்க அவர் முயற்சிக்கிறார் என்று சொன்னால், மனசாட்சி உள்ள தொண்டர்கள் அதை ஏற்பார்களா ? உனக்கு தொண்டன் கிட்ட ஆதரவு இருக்கு என்று சொன்னால், ஏன் தொண்டன் உரிமையை பறிக்கிற….
உள்ளே இருந்து…. கொள்ளையடிப்பதை தவறு, தவறு என்று சொன்ன காரணத்தினால் தான், கொள்ளையடித்த கும்பல் அண்ணன் ஓபிஎஸ்-க்கு எதிராக இருக்கிறது. தொண்டன் அண்ணன் ஓபிஎஸ்ஸை ஏத்துக்கிறான். எடப்பாடியின் உடைய அமைச்சரவை சகாக்கள் ஏன் ஏற்றுக்கொள்ளவில்லை ? நல்லவர்களும் இருந்தார்கள்…. அண்ணன் ஓபிஎஸ் சொன்னாங்க…..
எத்தனை முறை, எனக்கு நன்றாக தெரியும்….. வாங்குவதை குறையுங்கள்….தொண்டர்களை மதியுங்கள்….. ஊழல்களை கட்டுப்படுத்துங்கள்…. தவறு செய்கிறீர்கள்….. இது மக்களிடம் நம்மை அந்நியப்படுத்திவிடும்…. அத்தனையும் ஓபிஎஸ் சொன்னார்… ஓபிஎஸ் உடைய வார்த்தையை கேட்டிருந்தால், ஊழல் என்ற குற்றச்சாட்டு அதிமுக அமைச்சரின் மீது வந்திருக்காது. அண்ணன் ஓபிஎஸ் உடைய கருத்தை கேட்டிருந்தால், கூட்டணி சரியாக அமைக்கப்பட்டிருந்தால், ஆட்சி தொடர்ந்திருக்கும் என கூறினார்.