கோவை பாஜக மாவட்ட தலைவர் அரசு நிலத்தை அபகரித்த விவகாரம் தொடர்பான கேள்விக்கு பதிலளித்த அண்ணாமலை, அரசு நிலத்தை அபகரிச்ச விவகாரத்தில் மாவட்ட தலைவர் கருத்து சொல்வாரு. நான் அபகரிக்கவில்லை. எனக்கு அதுக்கும் சம்பந்தம் இல்லை என மாவட்ட தலைவர் வேறொன்று சொல்கிறார். அவர் கோர்ட்டுக்கு ஸ்டேய்க்கு மூவ் பண்ணி இருக்கிறார். அவர் வேறு ஒரு டாக்குமெண்ட் கொடுக்கிறார். இந்த கேள்விக்கான பதிலை மாவட்ட தலைவர் தான்  சொல்லுவார.  அண்ணாமலைக்கு இதுக்கு என்ன சம்பந்தம் ?

பாதயாத்திரையில் புகார் பெட்டியில் பெறப்பட்ட முக்கியமான புகார்கள்  திமுகவுக்கு எதிராக ஊழல் புகார் வந்துள்ளது. மக்கள் 30 மாதமாக யார் கையில் இருக்காங்க. திமுக கையில் இருக்கிறார்கள். அப்போ யார் மேல புகார் கொடுப்பாங்க. அந்த அரசு மேல குடுப்பாங்க. அதான ஜெனரலா  நடக்கும்.  இன்றைக்கு  30 மாசமா ஜானலிஸ்ட் நீங்க இருக்கீங்க.. யாராவது ஒரு பெட்டிக்கடை நண்பரோ, ரோட்டோரம் கடை இருக்கக்கூடிய சகோதர –  சகோதரி ஊழல் என புகார் சொன்னா யாரு மேல சொல்லுவாங்க ? முப்பது மாசமா  யாரு ஆட்சியில் இருக்கா?

அதிமுக ஊழல் குறித்து பொறுத்திருந்து பாருங்கள் என்ன சொல்கிறீர்கள் என்ற கேள்விக்கு பதில் அளித்த அண்ணாமலை, உங்க  TRP  ஏற்ற நான் ஏன் பதில் சொல்லணும். நீங்க நல்ல வேலை பண்ணி.. உங்க டிவியை நல்லா ரன் பண்ணி…  நீங்க நேர்மையா இருந்து டிஆர்பியை ஏத்தணும். அண்ணாமலை கிட்ட எடக்கு மடக்கா கேள்வியை கேட்டு அண்ணாமலை பதில் சொல்வதை வைத்து ஏன் டிஆர்பி ஏத்த பாக்குறீங்க ? உங்க சேனல்ல நீங்க ஹார்ட் வொர்க் பண்ணனும். நீங்க வேலையை செய்யாமல் அண்ணாமலை வச்சு டிஆர்பி ஏற்றலாம்ன்னா.. எப்படி ?

பொறுத்திருந்து பாருங்கள் என சொன்னேன். அதுக்கு மேல நான் என்ன சொல்லணும் ? உங்க டிஆர்பி ஏற்றுவதற்கு  நான் ஏன் பொறுத்திருந்து பாருங்கள் பொறுத்திருந்து பாருங்கள் என சொல்லணும். உங்க எடிட்டர் கிட்ட போன் பண்ணி அண்ணாமலை ஹார்ட் வொர்க் பண்ண சொன்னாருன்னு சொல்லுங்க. டிஆர்பி ஏத்துவதற்கு ஹார்டுவேர் பண்ணி,  நடுநிலையா இருக்கணும் TRP  ஏறும்னு சொன்னாங்கன்னு சொல்லுங்க என தெரிவித்தார்.