
செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, ஜாதிய வன்முறைக்கு எதிராக கடுமையான சட்டத்தை உருவாக்க வேண்டும். அதில் எந்த மாற்று கருத்தும் இல்லை. ஆனால் அதை உருவாக்க வேண்டும் என்றால் ? அதற்கு சமுதாயத்திற்கு தகுந்த மாதிரி தலைவர் அவர்களும் வேண்டும். பொன்முடி அவர்கள் ஒரு மேடையில் உட்கார்ந்து… ஒரு மக்கள் பிரதிநிதியை… பட்டியல் இன சமுதாயத்தை சேர்ந்த மக்கள் பிரதிநிதி ஜாதி பெயரைச் சொல்லித் திட்டினார், அதையும் பார்த்தோம்.
தமிழ்நாட்டில இன்னைக்குமே திமுகவினுடைய தலைவர்களே… ஜாதி வன்மத்தை தூண்டும் அளவுக்கு அவர்களுடைய பேச்சைகள் பல இடத்தில் இருக்கு. இதனால் எப்படி ஜாதி ஒழியும் ? திராவிட இயக்கம் என்று சொல்லி இத்தனை பாரம்பரியத்தில் வந்தவர்கள் அவர்களே… ஜாதி பெயரை சொல்லி சில இடத்தில் பேசுகிறார்கள். அப்படி இருக்கும் போது எப்படி ஒழியும்.
அதுவும் அமைச்சர்களாக இருப்பவர்களே பேசுகிறார்கள். அவர்கள் மீது என்ன ஆக்சன் எடுத்தார்கள் ? நரிக்குறவர் சமுதாய சகோதரரை நிற்கவைத்து கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் கால் மேல கால் போட்டு உட்கார்ந்திருக்கிறார். அந்த காணொளி காட்சி நாம பார்த்தோம். தொடர்ச்சியாக… அமைச்சர்களே இப்படி நடக்கும்போது என்ன நடக்கும் ? அப்ப வன்மத்தை தூண்டக்கூடிய எத்தனை படங்கள் எடுக்கின்றார்கள்
கடந்த ஆறு மாதம் மதமாகவோ…. ஒரு வருடமாகவோ…. ரெட்ஜெயண்ட் மூவி புரொடெக்ஷன், உதயநிதி ஸ்டாலின் ஹீரோ வரிசையா படம் எடுக்குறாங்க. இதெல்லாம் பிஞ்சு நெஞ்சங்கள் பார்க்கும்போது என்ன நினைப்பாங்க ? படம் ஒரு சமூக அக்கறையில் எடுப்பது வேறு, ஒரு சமூக தாக்கத்தில் எடுப்பது வேறு, வன்மத்தை தூண்டுவது போல் எடுப்பதும் வேறு. மூன்றுக்கும் வித்தியாசம் இருக்கிறது. அதை முதலமைச்சர் பாராட்டுகிறார்கள்.
ரெட்ஜெயண்ட் வச்சி ப்ரோமொட் செய்யுறாங்க. திரும்பத் திரும்ப அதையே செஞ்சிகிட்டு இருக்காங்க. இது எல்லாம் மாறினால் மட்டும்தான்… வெறும் சட்டம் மட்டும் ஜாதிய வன்முறையை குறைக்க போவதில்லை. இது அனைத்தையும் கொண்டு வந்தால் வன்முறையை குறைக்கலாம் என தெரிவித்தார்.