செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக பொதுச்செயலாளரும், தமிழக எதிர்க்கட்சி தலைவருமான, முன்னாள் முல்வர் எடப்பாடி பழனிசாமி,  காங்கிரஸ் கூட்டணியின் முதல் கூட்டம் நடந்தது. எங்க நடந்தது என்று உங்களுக்கு தெரியும் ?  இரண்டாவது கூட்டம் பெங்களூரூவில் நடந்தது.

அப்போ  கெஜ்ரிவால் என்ன கோரிக்கை வச்சாரு ? எங்களுடைய ஆதரவு வேண்டுமென்றால் எங்களுடைய கோரிக்கை நீங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும். உயர் அதிகாரிகள் மாற்றக்கூடிய ”மசோதா”வை நாடாளுமன்றத்திலே எங்களுக்கு ஆதரவு தெரிவிக்க வேண்டும்.

மற்ற கட்சிகள் அதற்கு முன்பு ஆதரவு தெரிவித்து பத்திரிக்கை செய்தியோடு  ஊடக செய்தி வெளியிட வேண்டும் என்று சொன்னார்கள். அதன்படி காங்கிரசிலிருந்து அனைத்து கட்சிகளும் ஆதரவு தெரிவித்து வெளியிட்டார்கள். அந்த கண்டிஷன் போட்டு தான் அவர் போய் அங்க அமர்ந்தார். அவர் மனிதர். அவருக்கு  தில்லு – திராணி இருக்கு.

அதே வேலையில் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் பெங்களூருக்கு செல்கிறார். இங்கே கடுமையான குடிநீர் பிரச்சனை இருக்குது. டெல்டா பாசன விவசாயிகளுக்கு தேவையான நீர் கிடைக்கல. நமக்கு மாதம் தோறும் உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி காவிரி  நதியில் இருந்து குறிப்பிட டிஎம்சி திறந்துவிடனும். இரண்டு மூன்று மாதம்  திறந்து விடல.

நான் ஏற்கனவே பேட்டி கொடுத்துட்டேன், பத்திரிக்கை செய்தி வெளியிட்டேன்.  அறிக்கையை வெளியிட்டேன். முதலமைச்சர் என்ன சொல்லி இருக்கணும் ? தமிழ்நாட்டு விவசாயிகளுடைய பிரச்சனையை தீர்க்க குடிநீர் ஆதாரமாக இருக்கக்கூடிய காவிரி நதிநீர் தேவையான  நீரை பெறுவதற்கு…  தமிழ்நாட்டினுடைய உரிமை பெறுவதற்கு…

உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பை நடைமுறைப்படுத்த கோரிக்கை வைத்திருக்க வேண்டும். நான் இந்த பெங்களூரு கூட்டத்தில் பங்கேற்க வேண்டும் என்றால் ?  கெஜ்ரிவால் போல… உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பின்படி,  எங்களுக்கு கிடைக்க வேண்டிய பங்கு நீரை மாதம் தோறும் காவிரியில் தண்ணீர் திறந்து விட்டால் தான் இந்த கூட்டத்திலே நான் இடம் பெறுவேன் என்று ஒரே ஒரு அறிவிப்பு கொடுத்திருந்தால் போதும்,  அழகா தண்ணி வந்து சேர்ந்திருக்கும் என தெரிவித்தார்.