காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டதாக மக்களவை செயலகம் அறிவித்துள்ளது பெரும் பரபரப்பை கிளப்பி உள்ளது. அவதூறாக பேசிய வழக்கில் ராகுல் காந்திக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி நீதிமன்றம் தீர்ப்பு அளித்த நிலையில், அவரை தகுதி நீக்கம் செய்து மக்களவை செயலகம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

எம்பி பதவியிலிருந்து தகுதிநீக்கம் செய்யப்பட்டது தொடர்பாக ராகுல் காந்தி டுவிட்டரில் கருத்து தெரிவித்தார். அதாவது, “இந்தியாவின் குரலுக்காக போராடுகிறேன். அதற்காக நான் எந்தவொரு விலையையும் தர தயாராக இருக்கிறேன்” என்று எம்பி பதவியிலிருந்து தகுதிநீக்கம் செய்யப்பட்ட ராகுல் காந்தி தெரிவித்தார்.

இந்நிலையில் “என் பெயர் சாவர்க்கர் அல்ல. காந்தி யாரிடமும் மன்னிப்பு கேட்க மாட்டான்” என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். லண்டனில் தான் பேசிய பேச்சுக்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என பாஜகவினர் கூறியது குறித்த கேள்விக்கு ராகுல் காந்தி பதிலடி கொடுத்துள்ளார்.