சமீபத்தில் சமூக வலைதளங்களில் வீடியோ ஒன்று வேகமாக பரவி வருகிறது. இந்த வீடியோவில் பாகிஸ்தானை சேர்ந்த ஆறு வயதுக் குழந்தை சோனியா, அதிரடி பேட்டிங் திறமையை வெளிப்படுத்தும் விதமாக பல ஷாட்களை விளையாடுகிறார். குறிப்பாக, விராட் கோலியை நினைவூட்டும் அழகான கவர் டிரைவ் ஷாட், பார்வையாளர்களை பரவசத்தில் ஆழ்த்தியுள்ளது.
View this post on Instagram
வீடியோவில், சோனியாவை அவரது தந்தை வீட்டின் மாடியில் இருந்து சவால் விடுகிறார். அதற்கு பதிலளிக்கும் குழந்தை, ஒரே ஒரு பந்து வீசப்படும் போது கூட துல்லியமான ஷாட்களை விளையாடுகிறார். இந்த வீடியோ, `soniacirctar` என்ற இன்ஸ்டாகிராம் கணக்கில் பகிரப்பட்டுள்ளது. தற்போது இவ்வீடியோவை கோடிக்கணக்கானோர் பார்த்து தங்களது பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.
“இந்த பாப்பா இந்தியாவில் பிறந்திருந்தா, உலகத்தரத்திலேயே விளையாடியிருப்பார்” என்று ஒருவர் கமெண்ட் செய்திருந்தார். ஆசியக் கோப்பை 2025ல் பாகிஸ்தான் அணியின் திறமையின்மையை கண்டித்த ரசிகர்கள், “இந்தக் குழந்தையை அணியில் சேர்த்தா, குறைந்தது ஒரு போட்டியாவது ஜெயிப்பாங்க” என கூறினர்.
சோனியாவின் பேட்டிங் வீடியோ பாகிஸ்தானில் மட்டுமல்ல, இந்திய ரசிகர்களிடையிலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆறு வயதிலேயே எல்லா வகையான கிரிக்கெட் ஷாட்களையும் மிகவும் நுட்பமாக விளையாடும் இந்த சிறுமி, எதிர்கால கிரிக்கெட் உலகின் விண்மீனாக மாறக்கூடும் என ரசிகர்கள் நம்பிக்கையுடன் கூறுகின்றனர்.
