மும்பையில் பிரபல ஆடை வடிவமைப்பாளர் மணிஷ் மல்கோத்ரா தனது இல்லத்தில் நடத்திய தீபாவளி விருந்து பிரமாண்டமாக அமைந்தது.

இதில் நீதா அம்பானி உள்ளிட்ட பல பிரபலங்கள் கலந்து கொண்டனர். நீதா அம்பானி, வெள்ளி ஜரிகை பதித்த சேலையுடன், மரகத காதணிகளையும், ரூ.17 கோடி மதிப்பிலான ஹெர்ம்ஸ் பிர்கின் கைப்பையையும் அணிந்து அனைவரையும் கவர்ந்தார்.

இந்த பையில் 3,025 வைரக் கற்கள் பதிக்கப்பட்டு, ஆடம்பரமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. உலகில் இதுபோன்ற பைகள் மூன்று பேரிடம் மட்டுமே உள்ளன, அதில் நீதா அம்பானியும் ஒருவர்.

நிகழ்ச்சியில் ராதிகா மெர்ச்சன்ட், ஸ்லோகா மேத்தா உள்ளிட்ட பல பிரபலங்கள் பங்கேற்றனர். நீதா அம்பானியின் வெள்ளி சேலை மற்றும் வைரக் கற்களால் அலங்கரிக்கப்பட்ட கைப்பை அனைவரது கவனத்தையும் ஈர்த்தது.

இந்த விருந்தில் அவரது தோற்றம் சினிமா பிரபலங்களையும் மிஞ்சியதாக பேசப்பட்டது. நீதா அம்பானியின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி, பலரும் ஆச்சரியத்துடன் பாராட்டி வருகின்றனர்.