இந்தியாவின் தனித்துவமான அடையாளமாகத் திகழும் மாற்று யோசனைத் திறனுக்குச் சான்றாக தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் குதிரை வண்டி வீடியோ பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. ஒரு பழைய ஆம்னி வேன் காரின் உடற்பகுதியைக் குதிரையுடன் இணைத்து உருவாக்கப்பட்டுள்ள இந்த வினோத வாகனத்தின் முன்புறம் பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் லோகோ பொருத்தப்பட்டுள்ளது காண்போரை வியப்பில் ஆழ்த்துகிறது.

 

 

View this post on Instagram

 

A post shared by Anita sharma (@anita_suresh_sharma)

இந்த வாகனத்தில் ஒருவர் சொகுசாக ஏறி அமர்ந்ததும் குதிரை அதனை இழுத்துச் செல்லும் காட்சிகள் இணையத்தில் வேகமாகப் பரவி வருகின்றன. இதைப் பார்த்த நெட்டிசன்கள் இந்தியாவின் இந்த அபாரமான திறமை நாட்டை விட்டு வெளியே சென்றுவிடக்கூடாது என்றும் வெயிலே தெரியாத குதிரை சவாரி இது என்றும் நகைச்சுவையாகப் பதிவிட்டு வருகின்றனர்.

அதே வேளையில் கனமான வாகனத்தை இழுக்கச் செய்வது குதிரைக்கு இழைக்கப்படும் கொடுமை எனச் சில விலங்கு ஆர்வலர்கள் தங்களது கவலையையும் வெளிப்படுத்தி வருகின்றனர்.