சமூக வலைதளங்களில் நாள்தோறும் பல்வேறு வினோத வீடியோக்கள் வெளியாகி வரும் நிலையில் தற்போது இரண்டு எலிகள் மற்போர் வீரர்களைப் போல சண்டையிட்டுக் கொள்ளும் வீடியோ ஒன்று இணையவாசிகளைப் பெரும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. ஒரு திறந்தவெளி மைதானத்தில் பல பூனைகள் வட்டமாக அமர்ந்திருக்க அவற்றின் நடுவே இரண்டு எலிகள் தங்களது பின்னங்கால்களால் நிமிர்ந்து நின்று ஒருவரை ஒருவர் ஆக்ரோஷமாகத் தாக்கி மல்யுத்தம் செய்கின்றன.

 

 

View this post on Instagram

 

A post shared by Animal videos (@onl.y._.pets)

பொதுவாக எலிகளைக் கண்டால் வேட்டையாடும் குணம் கொண்ட பூனைகள் இந்தச் சண்டையின் போது குறுக்கிடாமல் அமைதியாக வேடிக்கை பார்ப்பது பார்ப்போரை ஆச்சரியப்பட வைக்கிறது. இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிரப்பட்டு லட்சக்கணக்கான பார்வைகளைக் கடந்துள்ள இந்த வீடியோவைப் பார்த்த நெட்டிசன்கள் பூனைகள் சண்டையைத் தீர்த்து வைக்கும் நடுவர்களாக மாறியுள்ளதாக நகைச்சுவையாகக் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

அதே வேளையில் இந்த வீடியோவின் தரம் மற்றும் காட்சிகளைக் கண்டு இது செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தின் உதவியுடன் உருவாக்கப்பட்டிருக்கலாம் என்றும் சந்தேகங்கள் எழுப்பப்பட்டு வருகின்றன.