விஷப் பாம்புகள் மற்றும் மலைப்பாம்புகளுடன் விளையாடுவது உயிருக்கே ஆபத்தாக முடியும் என்ற போதிலும், ஒரு நபர் ஆக்ரோஷமான ராட்சத மலைப்பாம்புடன் மல்லுக்கட்டும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகிப் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
— Peché Africa 🇿🇦 (@pmcafrica) January 28, 2026
சுமார் ஒரு நிமிடம் ஓடும் அந்தத் திடுக்கிடும் காணொளியில், புதருக்குள் மறைந்திருந்த ஒரு பெரிய மலைப்பாம்பின் வாலைப் பிடித்து இழுத்து அந்த நபர் வெளியே கொண்டு வருகிறார். அப்போது அந்தப் பாம்பு மின்னல் வேகத்தில் அந்த நபரைத் தாக்க முற்பட்டாலும், அவர் லாவகமாகப் பின்வாங்கித் தப்பிக்கிறார்.
பலமுறை அந்தப் பாம்பு அவரைச் சுருட்டிப் பிடிக்கவும் கால்களைக் கவ்வவும் முயன்ற போதிலும், இறுதியில் தனது அனுபவத்தால் அந்த நபர் மலைப்பாம்பின் வாயைப் பிடித்து அதனைக் கட்டுப்படுத்துகிறார்.
இந்தப் பதற்றமான காட்சிகளை இணையத்தில் இதுவரை 19 லட்சத்திற்கும் அதிகமானோர் பார்த்துள்ள நிலையில், இது போன்ற ஆபத்தான செயல்களில் ஈடுபடுவது பெரும் விபரீதத்தை ஏற்படுத்தும் என்று ஒரு தரப்பினரும், அந்த நபரின் துணிச்சலை வியந்து மற்றொரு தரப்பினரும் தங்களது கருத்துகளைப் பகிர்ந்து வருகின்றனர்.
