ஆஸ்திரேலியாவை சேர்ந்தவர் லூகாஸ் ஹெல்ம்கே. இவர்  1 மணி நேரத்தில் 3 ஆயிரம் தண்டால் எடுத்து இதற்கு முன் செய்திருந்த உலக சாதனையை முறியடித்துள்ளார். இது ஒரு நிமிடத்திற்கு 53 என்ற சராசரியை கொண்டது. இதற்கு முன்பு கடந்த 2022-ம் ஆண்டு ஏப்ரலில்ஆஸ்திரேலியாவை சேர்ந்த மற்றொருவரான டேனியல் ஸ்காலி என்பவர் அதிக தண்டால் எடுத்து சாதனை புரிந்துள்ளார்.

இந்த நிலையில் இதனை லூகாஸ் முறியடித்துள்ளார். மேலும், இதற்காக 2 முதல் 3 ஆண்டுகள் வரை அவர் பயிற்சி எடுத்ததாக கூறியுள்ளார். மேலும், இந்த சாதனை முயற்சி செய்ய லூகாஸ் தனது வீட்டில் தனக்கென ஜிம் ஒன்றை வைத்துள்ளார்.