இந்திய சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகர்களில் ஒருவராக விளங்குபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவர் முகேஷ் அம்பானியின் மனைவி நீட்டா அம்பானியின் கலாச்சார மைய கட்டிட திறப்பு விழாவில் கலந்து கொண்டார். இதைத்தொடர்ந்து தற்போது நடிகர் ரஜினிகாந்த் தன்னுடைய நண்பர் அம்பானிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், மும்பையில் உலகத்தரம் வாய்ந்த பிரம்மாண்டமான திரையரங்கை உருவாக்கியதற்கு என் நண்பர் முகேஷ் அம்பானிக்கு வாழ்த்துக்கள் மற்றும் நன்றிகள்.

நீட்டா அம்பானி இது போன்ற தேசப்பற்று மிகுந்த மனதை மயக்கும் நிகழ்ச்சியை வழங்கியதற்காக உங்களுக்கும் உங்கள் குழுவினருக்கும் நன்றியும் பாராட்டுகளும். இந்த திரையரங்கில் ஒரு நாடகத்தில் நடிக்க வேண்டும் என எனக்கும் ஒரு கனவு இருக்கிறது. மேலும் என்னுடைய கனவு விரைவில் நிறைவேறும் என்று நம்புகிறேன் என ரஜினி பதிவிட்டுள்ளார்.