தமிழ் சினிமாவில் பிரபலமான இயக்குனராக வலம் வருபவர் வெற்றிமாறன். தனுஷ் நடிப்பில் வெளியான பொல்லாதவன் என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான வெற்றிமாறன் அடுத்தடுத்து பல சூப்பர் ஹிட் படங்களை இயக்கி ரசிகர்கள் மத்தியில் தனக்கென தனி இடத்தை பிடித்தார். இயக்குனர் வெற்றிமாறன் தற்போது விடுதலை திரைப்படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தில் சூரி ஹீரோவாக நடித்துள்ள நிலையில் விஜய் சேதுபதி முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.

இந்த படம் மார்ச் 31-ஆம் தேதி வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. தொடர்ந்து பலரின் பாராட்டுகளை பெற்று வரும் விடுதலை திரைப்படத்தில் பணிபுரிந்த நபர்களுக்கு வெற்றிமாறன் தங்க நாணயங்களை பரிசாக வழங்கியுள்ளார். இது தொடர்பான புகைப்படமும் சோசியல் மீடியாவில் வெளியாகி உள்ளது. இதற்கு முன்னதாக விடுதலை படத்தில் பணிபுரிந்த 25 நபர்களுக்கு ஆளுக்கு ஒரு கிரவுண்ட் நிலத்தை பரிசாக வாங்கி கொடுத்திருந்தார் வெற்றிமாறன். இதைத் தொடர்ந்து தற்போது தங்க நாணயம் பரிசு கொடுத்துள்ளார். மேலும் வெற்றி மாறனின் இந்த செயலுக்கு தற்போது பாராட்டுகள் குவிந்து வருகிறது.