தமிழ் சினிமாவில் விஜய் நடித்த தமிழன் திரைப்படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் பிரியங்கா சோப்ரா. இந்த படத்திற்கு பிறகு பாலிவுட்டில் பட வாய்ப்புகள் குவிந்ததால் பிரியங்கா சோப்ரா பாலிவுட்டில் கவனம் செலுத்த ஆரம்பித்தார். தற்போது முன்னணி நடிகையாக இருக்கும் பிரியங்கா சோப்ரா ஹாலிவுட்டிலும் அதிக படங்களில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் நடிகை பிரியங்கா சோப்ரா சமீபத்தில் கலந்து கொண்ட ஒரு பேட்டியில் தொகுப்பாளர் ஆர்ஆர்ஆர் படத்தை பாலிவுட் படம் என்று கூறினார். உடனே அவரை நிறுத்திய பிரியங்கா ஆர்ஆர்ஆர் படம் பாலிவுட் சினிமா கிடையாது. அது ஒரு தமிழ் படம் என்றார். அதோடு தமிழிலும் தற்போது இது போன்ற பிரம்மாண்டமான திரைப்படங்களை எடுக்கிறார்கள் என்றும் பிரியங்கா சோப்ரா கூறினார். மேலும் இது தொடர்பான வீடியோ தற்போது வலைதளத்தில் வைரலாகி வரும் நிலையில் நடிகை பிரியங்கா சோப்ராவை தெலுங்கு ரசிகர்கள் பலரும் விளாசி வருகிறார்கள்