மலையாள சினிமாவில் பிரபலமான இயக்குனராக இருப்பவர் பிரியதர்ஷன். இவர் தற்போது கொரோனா பேப்பர்ஸ் என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தின் நிகழ்ச்சியில் இயக்குனர் பிரியதர்ஷன் கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது, நடிகர்கள் மம்முட்டி மற்றும் மோகன்லால் ஆகிய இருவரும் மலையாள சினிமாவின் இரு தூண்கள். ஒரு காலத்தில் மலையாள சினிமா என்றால் ஆபாச படங்கள் தான் என்று கெட்ட பெயர் இருந்தது.

அதையெல்லாம் மாற்றி மலையாள சினிமாவை மரியாதைக்குரிய சினிமாவாக மாற்றிய பெருமை மோகன்லால் மற்றும் மம்மூட்டி ஆகியோருக்கே சேரும். இதனால் இன்றைய தலைமுறையினர் உட்பட அனைவருக்குமே மோகன்லால் மற்றும் மம்முட்டி இருவரும் முன்னோடிகள் என்று கூறலாம் என கூறினார். மேலும் இயக்குனர் பிரியதர்ஷன் பேசியது தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.