தலைநகர் உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் திறமையான இளைஞர்கள் தங்களது கலைத் திறன்களால் பொதுமக்களை வியப்பில் ஆழ்த்தி வருகின்றனர். அந்த வகையில் பூங்கா ஒன்றில் அமர்ந்து வாலிபர் ஒருவர் தனது இனிமையான குரலில் பாடிய பாடல் தற்போது சமூக வலைதளங்களில் பலரது இதயங்களை வென்று வைரலாகி வருகிறது.

 

 

View this post on Instagram

 

A post shared by Rahul Bohra | Singer | Delhi (@rahulbohra72)

எவ்வித நவீன ஒலிபெருக்கிக் கருவிகளோ அல்லது மேடையோ இன்றி கையில் ஒரு கிட்டார் இசைக்கருவியை மட்டும் வைத்துக்கொண்டு அவர் பாடிய பாலிவுட் பாடல் அங்குள்ள சூழலையே இசைமயமாக்கியது. பூங்காவிற்கு நடைப்பயிற்சி மற்றும் ஓய்வெடுக்க வந்திருந்த பொதுமக்கள் அந்த இளைஞரின் காந்தக் குரலில் மயங்கி அவரது பாடலை மெய்மறந்து ரசித்தனர். ராகுல் போரா என்பவரது சமூக வலைதளப் பக்கத்தில் பகிரப்பட்ட இந்தக் காணொளி இதுவரை ஒரு கோடிக்கும் அதிகமான பார்வைகளைப் பெற்றுள்ளது.

இன்றைய செயற்கையான குரல் மாற்றத் தொழில்நுட்ப காலத்திற்கு மத்தியில் இத்தகைய எதார்த்தமான குரலைக் கேட்பது மனதிற்கு இதமாக இருப்பதாகப் பலரும் தங்களது கருத்துகளைப் பகிர்ந்து வருகின்றனர்.