சர்வதேச மகளிர் தினம் இன்று கொண்டாடப்படுகிறது. மகளிர் தினத்தை முன்னிட்டு தமிழக முதல்வர் ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி போன்றோர் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். அந்த வகையில் தற்போது தேமுதிக கட்சியின் தலைவர் விஜயகாந்த்தும் டுவிட்டரில் மகளிர் தின வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

அதில் அனைவருக்கும் மகளிர் தின வாழ்த்துக்கள். கல்வி மற்றும் வேலைவாய்ப்பை தாண்டி பெண்கள் அரசியலிலும் தடம் பதிக்க வேண்டும். பெண்கள் சுயமாக சம்பாதித்து சம உரிமையோடு அனைத்து நலமும் வளமும் பெற வேண்டும்‌ என இதயமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதாக பதிவிட்டுள்ளார்.