தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள கல்யாணபுரம் பகுதியில் தாவுத்கனி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பாத்திமா என்ற மனைவி இறந்துள்ளார். இவர் மாத்திரை வாங்குவதற்காக வீட்டில் இருந்து நடந்து கண்டியூருக்கு சென்றுள்ளார். பின்னர் மீண்டும் வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார். இந்நிலையில் திருவையாறு நோக்கி சென்ற லாரி எதிர்பாராதவிதமாக பாத்திமா மீது மோதியது.

இதனால் படுகாயமடைந்த பாத்திமாவை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.